About Me

My Photo
Venkataramanan Ramasethu,is an academician in the Eye Care field and a Creative Writer,with a sensitive outlook towards people, place, profession,life and relationships.Presently he is with Sankara Nethralaya,Kolkata as Academic Incharge - Dept of Optometry & Senior Optometrist,Low Vision Clinic. He believes,"To be an inspiring Teacher,one should be a Disciplined Student throughout Life"

R Venkat

R Venkat
RVR

Sunday, January 29, 2012

கண்ணம்மா (3)

காற்று வெளியிடைக் கண்ணம்மா -- நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்; -- அமு
தூற்றினை யொத்த இதழ்களும் -- நில
வூறித் ததும்பும் விழிகளும் -- பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் -- இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே -- இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே -- இந்தக் (காற்று வெளி) 1

நீயென தின்னுயிர் கண்ணம்மா -- எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் -- துயர்
போயின, போயின துன்பங்கள் -- நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே -- என்றன்
வாயினி லேயமு தூறுதே -- கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே -- உயிர்த்
தீயினி லேவளர் சோதியே -- என்றன்
சிந்தனையே என்றன் சித்தமே! இந்தக் (காற்று வெளி) 2

0 comments: